India
“26 லட்சம் ஏழை மக்களுக்கு ‘பட்டாவுடன் இலவச வீட்டு மனை’ வழங்க முடிவு”: ஆந்திர முதல்வர் அசத்தல் அறிவிப்பு!
ஆந்திர மாநிலத்தில் நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதி நடவடிக்கைகள் மற்றும் அவசரகால திட்டம் போன்றவை விவாதிக்கப்பட்டு அவரை செயல்படுத்த ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் ஒருபகுதியாக 26 லட்சம் ஏழை மக்களுக்கு இலவசப் பட்டா வழங்க முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25-ம் தேதி யுகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு) கொண்டாடப்படும் நாளன்று 43,141 ஏக்கர் நிலங்களை மக்களுக்கு வழங்கவும், அன்றைய தினமே நிலத்திற்கு உரிமையாளர்கள் பெயரில் பட்டா பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக 26,979 அரசு நிலத்தை தவற 14,164 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்திற்கு உரிய பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்கான வேலைகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அம்மாநில செய்தித்துறை மற்றும் மக்கள் தொடர்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!