India

“YES BANK திவால் அறிவிப்புக்கு முன்பே பணத்தை எடுத்த குஜராத் நிறுவனம்”-மோடி அரசு மீது நீடிக்கும் சந்தேகம்!

மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து கடுமையான பொருளாதார சரிவை இந்தியா சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

வங்கியில் கடன் வாங்கியவர்கள் திருப்பி அளிக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடியதன் விளைவாக வங்கிகள் முடங்கும் அவலநிலை உருவானது. பா.ஜ.க-வின் கடந்த கால ஆட்சியில் இருந்து தற்போதுவரை 2 வங்கிகள் முடங்கி ரிசர்வ் வங்கி அவற்றைக் கையில் எடுத்துள்ளது.

குறிப்பாக, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி திவாலானதையடுத்து ‘யெஸ் வங்கி’ கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்தது. வாராக்கடன் அதிகரித்து கடுமையான நிதி சிக்கலில் தவித்து வந்த ‘யெஸ் வங்கி’ முழுவதையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டுவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இனி ‘யெஸ் வங்கி’க்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இந்த ஒருமாத காலத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற பல கட்டுப்படுகளை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்கள் மத்தியிலும் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது.

இதனிடையே யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வொர்லி பகுதியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். மேலும் ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

டி.எப்.எச்.எல் (DFHL) நிறுவனம் 80 போலி கணக்குகள் மூலம் சுமார் 12,733 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தையில் ஈடுபட்டது. அதில் சில பரிவர்த்தனைகள் ‘யெஸ் வங்கி’ மூலம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி டி.எப்.எச்.எல் நிறுவத்தின் தலைவர் தீரஜ் வதாவனுடன் இணைந்து ராணா கபூர் பல்வேறு நிறுவனத்தின் பங்குகளை பெற்றிருப்பதும், அந்த நிறுவனத்திற்காக யெஸ் வங்கி 20,186 கோடி ரூபாய் கடன் அளித்ததும் தெரியவந்துள்ளது. பல்வேறு வீதி மீறல் மற்றும் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டையடுத்து ராணா கபூர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த அதிர்ச்சித் தகவல் ஒவ்வொன்றாக வெளிவரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியாகும் சில மணி நேரத்திற்கு முன்பு குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று ‘யெஸ்’ பேங்க்கில் இருந்து ரூ.265 கோடி பணத்தை எடுத்துள்ளது என்ற மற்றொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் வதோதரா மாநாகராட்சி எஸ்.பி.வி.யின் தலைமை நிர்வாக அதிகாரியும், வி.எம்.சியின் துணை நகராட்சி ஆணையருமான சுதிர் படேல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மானியத்தின் ஒரு பகுதியை உள்ளூர் YES வங்கி கிளையில் டெபாசிட் செய்து, பின்னர் யெஸ் வங்கி தற்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு தொகையைத் திரும்பப்பெற்று பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

ராணா கபூர்

முன்னதாக திருப்பதி தேவஸ்தானம் யெஸ் வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருந்த 1,300 கோடி ரூபாயை மொத்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் எடுத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வதோதரா மாநாகராட்சி நிர்வாகம் பெரிய அளவிலான தொகையை மாற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடியில் இருந்து வரும் யெஸ் வங்கி எப்படி மிகப் பெரிய தொகையைக் கொடுத்தது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Also Read: “6 ஆண்டு ஆட்சியில் அம்பலமானது பா.ஜ.க அரசின் திறமையின்மை” : ‘Yes Bank’ விவகாரத்தில் ப.சிதம்பரம் ஆவேசம்!

இந்தச் சூழலில், நிதி நெருக்கடியில் மூழ்கியிருக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை எஸ்.பி.ஐ வங்கி வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவலில், யெஸ் வங்கிக்கான மறுகட்டமைப்பு திட்டப்படி, 2 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 49 சதவீத பங்குகளை மட்டும் எஸ்.பி.ஐ வங்கி வாங்குவதற்கு முன்வந்துள்ளது.

பங்குகளை எஸ்.பி.ஐ வங்கி வாங்குவதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஒரு வங்கியை இணைக்கும்போது பொதுத்துறை வங்கியின் இருப்பு விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Also Read: வாராக்கடன் அதிகரிப்பால் YES வங்கியை கைப்பற்றிய ரிசர்வ் வங்கி - ‘மோடி ஆட்சியில் வங்கியே திவாலாகும் அவலம்’!