India
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.446 கோடி செலவு : அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண விவரம்!
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து பிரதமர் விமானத்திலேயே ஆட்சி நடத்துகிறார் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களும் அதற்காக ஆன செலவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான செலவு விவரங்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் முரளீதரன் பதில் அளித்துள்ளார்.
அதில், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.446.52 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விமான செலவுகளும் அடங்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்தத் தகவலில், 2016 -2017 காலகட்டத்தில் இதற்காக ரூ.78.52 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2017 -2018ஆம் ஆண்டு ரூ.99.90 கோடி ரூபாயும், 2018 -2019ஆம் ஆண்டு ரூ.100.02 கோடியும், 2019-20-ம் ஆண்டில் ரூ.46.23 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்காக மட்டும் ஐந்து ஆண்டுகளில் ரூ.446.52 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்