India
இந்தியாவில் பரவும் கொரோனா : பல இடங்களில் மாஸ்க் தட்டுப்பாடு - தாறுமாறாக அதிகரிக்கும் விலை!
உலகெங்கும் கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 நோய் தாக்குதலால் மக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது அது இந்தியாவிலும் அச்சுறுத்தல் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
கேரளாவில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட மூவர் நோய் பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், இத்தாலியில் இருந்து வந்த டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.
அதற்குப் பிறகு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதில், இத்தாலியில் இருந்து இந்தியா வந்த 16 பேருக்கும் அவர்களுடன் இருந்த டிரைவருக்கும், டெல்லியில் ஒருவர், ஆக்ராவில் 6 பேர் உட்பட 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா குறித்த அச்சம் மக்களிடையே மேலோங்கியுள்ளது.
மேலும், மலேசியா மற்றும் இலங்கையிலிருந்து திருச்சி வந்த 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தமிழக மக்களையும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக கிருமி நாசினி, மாஸ்க் போன்றவற்றை வாங்குவதற்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். அதில், டெல்லி என்.சி.ஆர், மத்திய டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாஸ்க்குகள், கிருமி நாசினி (hand sanitizer) ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை காரணம்காட்டி, வியாபாரிகள் பலர் மாஸ்க்குகளின் விலையை ஏகத்துக்கும் உயர்த்தியுள்ளனர். ஏற்கெனவே டெல்லியில் நிலவிய மாசு காரணமாக மாஸ்க்குகள் விற்கப்பட்டு வந்தாலும் அதற்கான தட்டுப்பாடும், தேவையும் அதிகரித்ததால் ரூ.10க்கு விற்கப்பட்ட மாஸ்க்குகள் நான்கு மடங்கு விலை உயர்த்தப்பட்டு ரூ.40க்கு விற்கப்படுகிறது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!