India
“கட்டவிழ்த்து விடப்பட்ட டெல்லி வன்முறை” : சிகிச்சையில் இருந்த 3 பேர் பலி - உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு!
டெல்லி ஷாஹீன்பாக்கில் 76 நாட்களாக அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர், மாஜ்பூர் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் 3 நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான கபில் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற சி.ஏ.ஏ ஆதரவு பேரணியில் பங்கேற்ற சி.ஏ.ஏ ஆதரவாளர்கள், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள் மீது நோக்கி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து போராட்டக் களங்களில் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வன்முறை நிகழ்ந்தது. வன்முறையாளர்கள் வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்டவற்றை தீவைத்துக் கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி, இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களை சூறையாடி அங்கு இந்து அமைப்புகளின் கொடியை நிறுவி அராஜகப் போக்கை கடைபிடித்துள்ளது இந்துத்வா கும்பல். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் கைகட்டி டெல்லி போலிஸ் வேடிக்கை பார்த்ததும், வன்முறையாளர்களுக்கு ஆதரவாக பல இடங்களில் போலிஸார் செயல்பட்டதும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மூலம் தெளிவானது.
இந்நிலையில் இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று இரவு 27 ஆக இருந்த நிலையில் தற்போது 30 ஆக அதிகரித்துள்ளது. வன்முறையின்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில இடங்களில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டாலும் பதற்றமான சூழல் நிலவு வருகிறது. இந்நிலையில் வன்முறைக்குக் காரணமான பா.ஜ.கவினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை இடம்மாற்றம் செய்து இந்த அரசாங்கம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்