India

#DelhiRiots: "பால் வாங்க வந்தவர் சுட்டுக்கொலை” - கொல்லப்பட்டவர்களில் 19 பேர் பட்டியலை வெளியிட்ட The Wire!

பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாகக் கூறி வன்முறையில் இறங்கியது இந்துத்வா கும்பல்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறை முப்பதுக்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுவாங்கி இருக்கிறது. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

வன்முறையாளர்களின் வெறியாட்டத்தில் குண்டடி பட்டுச் செத்தவர்களில் குழந்தைகளுக்குப் பால் வாங்க கடைவீதிக்கு வந்தவர்களும், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களும் அடக்கம்.

மதவெறியால் அப்பாவிகளை அடித்துக் கொன்று ரத்தம் குடித்த வன்முறையாளர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி காவல்துறை.

டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் பலரைப் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், துப்பாக்கியால் சுட்டும், கடுமையாகத் தாக்கியும் கொல்லப்பட்டவர்களில் 19 பேரை அடையாளம் கண்டு வெளியிட்டுள்ளது The Wire செய்தி நிறுவனம்.

டெல்லியில் வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் 19 பேர் விவரம் வருமாறு :

1. முபாரக் ஹுசைன் (28) கூலித் தொழிலாளி

விஜய் பார்க்கில் நெஞ்சில் சுடப்பட்டு படுகொலை

2. ஷாஹித் கான் ஆல்வி (22) ஆட்டோ டிரைவர்

பஜன்புரா தர்ஹா அருகே வயிற்றில் சுடப்பட்டு கொலை

3. முதாசிர் கான் ஆட்டோ டிரைவர்

சுட்டுப் படுகொலை

4. நசீம் கான் (35) ஸ்கிராப் டீலர்

சுட்டுப் படுகொலை

Data : The Wire

5. முகமது ஃபுர்கான் (30)

ஜாஃப்ராபாத் பகுதியில் உணவு வாங்க வந்தபோது சுட்டுக் கொலை

6. மெஹ்தாப் (22)

எரித்துக்கொலை

7. ரத்தன் லால் (42) தலைமை காவலர் டெல்லி

கோகுல்புரியில் சுட்டுக்கொலை

8. ராகுல் சோலங்கி (பொறியாளர்)

பால் வாங்குவதற்காக வெளியே வந்தவர் கழுத்தில் சுட்டுக் கொலை.

9. அங்கிட் சர்மா (26) உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளர்

பணி முடிந்து வீடு திரும்பியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டார்.

10. வினோத் குமார் (46)

வீடு திரும்புகையில் அடித்துக் கொலை

11. வீர் பான் சிங் (48)

சாப்பிடச் சென்றவர் சுட்டுக் கொலை.

12. அஷ்ஃபாக் ஹுசைன் (24) எலெக்ட்ரிசியன்

முஸ்தஃபாபாத்தில் 5 குண்டுகள் பாய்ந்து பலி.

13. தீபக் (34)

காயங்களோடு சுடப்பட்டு மரணம்.

14. இஷாக் கான் (24)

சுட்டுக் கொலை

15. ஷான் மொஹட் (34)

சுட்டுக் கொலை

16. ப்ரவேஷ் (48)

துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை.

17. ஜாகிர் (24)

பல குத்துக் காயங்களோடு மரணம்.

18. தில்பார்

எரித்துக் கொலை.

19. ராகுல் தாக்கூர் (23)

தாக்குதலில் மரணம்

Also Read: 6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக உயிரை துச்சமெனக் கருதி நெருப்புக்குள் புகுந்த இந்து நபர் : மரிக்காத மனிதம்!