India

“தவறை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்” : பொருளாதார சரிவை மூடிமறைக்கும் மோடி அரசுக்கு மன்மோகன் சிங் அட்வைஸ்!

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக சிறு-குறு தொழில்கள் முற்றிலும் சிதைந்துபோயுள்ளன. இதனால் தொழில் துறை நலிவடைந்து ஏற்றுமதி - இறக்குமதி குறைந்துள்ளது. அதன் எதிரொலியாக பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியா குறித்த தனது மதிப்பீட்டை குறைத்துக் கொண்டுள்ளன.

இந்நிலையில், இந்நிலையில் இந்தியப் பொருளாதார மதிப்பை 2025-ஆம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று மோடி அரசின் முக்கிய அமைச்சர்கள் பலர் கூறிவருகின்றனர்.

ஆனால், அதற்கான வாய்ப்பில்லை என்றும் இன்றைய பொருளாதார சூழலின் அடிப்படையில் பார்த்தால், இன்னும் 5 ஆண்டுகள் ஆனாலும், இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மான்டேக்சிங் அலுவாலியா எழுதிய ‘பின்புலம்’ என்ற பொருளாதார புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது நடந்த நல்ல விஷயங்களை குறிப்பிட்டுள்ளதுடன், எதில் பலவீனமாக இருந்தது என்பதும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்றவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. ஆனால், தற்போதைய மத்திய அரசு பொருளாதார மந்தநிலையை, வீழ்ச்சியை ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல.

Also Read: “இன்னும் 5 ஆண்டுகள் ஆனாலும் மோடி ஆட்சியில் பொருளாதாரம் உயராது”- திட்ட கமிஷன் முன்னாள் துணை தலைவர் பேச்சு!

அரசு, தான் எதிர்கொள்ளும் பிரச்னையை அங்கீகரிக்காவிட்டால், அதனை திருத்திக் கொள்வதற்கான நம்பத்தகுந்த தீர்வு காண முயற்சிக்காது. இது மிகவும் ஆபத்தானது. இது விவாதிக்கப்பட வேண்டியது. அதுமட்டுமின்றி, 2024 - 2025ம் ஆண்டில் 5 லட்சம் கோடி பொருளாதார நாடாக இந்தியா மாறும் என பா.ஜ.க அமைச்சர்கள் கூறிவருவது முரண்பாடானது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மோடி ஆட்சியில் கவலைக்கிடமான இந்திய பொருளாதாரம் - ஜிடிபி குறைந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது: மன்மோகன் சிங்