India
“தமிழுக்கு வெறும் ரூ.22 கோடி.. சமஸ்கிருதத்திற்கு ரூ.643 கோடி” : தமிழ்மொழிக்கு துரோகம் செய்த மோடி அரசு!
பா.ஜ.க மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அடியெடுத்து வைத்ததில் இருந்து இந்துத்துவா கருத்துகளை தீவிரமாக மக்கள் மத்தியில் புகுத்த முயற்சித்து வருகிறது. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கடை’, ‘ஒரே நாடு; ஒரே கல்விக் கொள்கை’ போன்ற திட்டங்கள் இந்துத்துவா கொள்கைகையை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. மேலும், நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியை தொடர்ந்து பா.ஜ.க செய்துவருவதாக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மொழிகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய நிதி தொடர்பாக சிவசேனா எம்.பி கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 643.84 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சமஸ்கிருத மொழியில் மேம்பாட்டுக்காக டெல்லி ராஷ்டிரிய சமஸ்கிருதம் சன்ஸ்தான் அமைப்பு உருவாக்கப்பட்டதாகவும், சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு செல்ல அதற்காக அதிக நிதி ஒதுக்கி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி மொழிக்காக 643.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரிய மொழிகளுக்கு செலவிட்ட தொகையைவிட 29 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதால் தமிழகத்தில் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 10.59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிதி, 2018 - 2020-ல் 4.65 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல் பிறமொழிகளுக்கு வழங்கப்பட்ட நிதியையும் இந்த அரசாங்கம் குறைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெறும் 7.7 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த சமஸ்கிருத திணிப்பு முயற்சியால் பிற மொழிகள் அழியக்கூடும் என மொழியியல் அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?