India
மோடி அரசின் சாதனை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ.147 உயர்வு- பொதுமக்கள் கடும் பாதிப்பு!
வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்கி வந்தது.
இந்தநிலையில் மோடி ஆட்சிக்கு வந்ததும் மானிய விலை திட்டத்தை “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)" என்று புதிய பெயர் சூட்டி, புதிய திட்டம் போல் செயல்படுத்தினார்.
மேலும் ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு இலவசம் என்று கூறினார். ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மானிய விலையில் எல்பிஜி சமையல் எரிவாயு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் வழக்கம்போல சொல்வது ஒன்றும், செய்வதும் ஒன்றுமாக ஆளும் பா.ஜ.க அரசு சிலிண்டர் விலையை அடிக்கடி உயர்த்தியது. அதன்படி, மானியமில்லாத சிலிண்டர் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவினம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலையை டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் உயர்த்தப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
சிலிண்டரின் விலையைப் பெறுத்தவரை, சென்னையில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயாகும், மும்பையில் 144.50 ரூபாய் உயர்த்து 858.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 896 ரூபாயாகவும், மும்பையில் 829.05 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து 6-வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெறும் 20 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது அதிகட்சமாக 147 ரூபாய் கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?