India
இதுதான் மோடி அரசின் பட்ஜெட் சாதனையா ? : ஒரே நாளில் ரூபாய் 3.6 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று 2020-2021ம் ஆண்டுக்கான மிக நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சரின் இந்த பட்ஜெட்டில் பிரச்னைக்குரிய அம்சங்கள் இருப்பதாக பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வீழத் தொடங்கிய பங்குச் சந்தை, பட்ஜெட் வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே 1,000 புள்ளிகள் சரிந்தது.
இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அவர்கள் இழந்த முதலீடு தொடர்பாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக பிப்ரவரி 1 அன்று, மும்பை பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது.
அதனையடுத்து பிப்ரவரி 2 அன்று, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு ஒரே நாளில் 987.96 புள்ளிகள் குறைந்து 39,735.53 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடியும் ஒரே நாளில் 300 புள்ளிகள் வரை குறைந்து 11 ஆயிரத்து 661 புள்ளிகளுடன் முடிந்தது.
ஒட்டுமொத்தமாக மும்பை பங்குச் சந்தை -2.43 சதவீதமும் தேசிய பங்குச் சந்தை -2.51 சதவிகிதமும் சரிவைக் கண்டன. மும்பை பங்குச்சந்தையில் பிப்ரவரி 2 அன்று ஒரேநாளில் மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், 1.53 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 3.6 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
தற்போது பட்ஜெட் தாக்கல் செய்து 4 நாட்கள் ஆனபிறகும் கூட பங்குச்சந்தைகளில் உயர்வு என்பதே இல்லாமல் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் பங்குகளின் மீது முதலீடு செய்யத் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பங்குச் சந்தை நிபுணர் ஒருவர் கூறுகையில், “மோடி அரசின் நடப்பாண்டு பட்ஜெட்டின்போதான பங்குச்சந்தை சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, கடந்த, 11 ஆண்டுகளில் ஏற்படாத நிலை என்றே சொல்லலாம்.
கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி, பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த காலத்தில், ஒரே நாளில் 1,070.63 புள்ளிகள் அளவிற்கு பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. அதற்குப் பின், தற்போதுதான் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் குறியீடு ஒரேநாளில் சுமார் 987.96 புள்ளிகள் அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.
அப்போது சரிந்த அளவைவிட இப்போது ஏற்பட்டுள்ள சரிவு பொருளாதாரத்தில் பெரும் சுணக்கத்தை ஏற்படுத்தும். இதுதான் மோடி அரசின் பட்ஜெட் சாதனையா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!