India
தொடங்கிய ஓராண்டுக்குள் விவசாயிகள் உதவித்தொகை 20% கட்? - விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் பா.ஜ.க அரசு!
நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. அப்போது 2020-21ம் நிதியாண்டின் நிதிநிலைக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின் மூலம் மத்திய பா.ஜ.க அரசு என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வரப்போகிறதோ என்ற அச்சம் நாட்டு மக்களிடையே பரவலாக நிலவுகிறது.
இதற்கிடையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 என மூன்று தவணையாக வழங்கப்படும் என பா.ஜ.க அரசு அறிவித்தது. இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இது பிரதமரின் கிஸான் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இதன் கீழ் 14 கோடியே 50 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரையில் 9 கோடியே 50 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும், அதில் 7 கோடியே 50 லட்சம் விவசாயிகளின் ஆதார் எண் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2020-21 நிதியாண்டில் விவசாயிகளுக்கான உதவித்தொகைக்கென 75 ஆயிரம் கோடியில் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தால் போதுமானது என மத்திய வேளாண் அமைச்சகம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிஸ்ஸான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில், எதிர்வரும் நிதியாண்டுக்கான அறிக்கையில் இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்குவதில் 20 சதவிகிதம் குறைவாகும் எனும் செய்தி அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகள் பற்றிய தகவல்கள் பெறப்படாமல் மந்தகதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!