India
"100 நாள் வேலைத் திட்டத்திலும் தோல்வி" : மோடி ஆட்சியில் வேலையின்றி திண்டாடும் கிராமப்புற மக்கள்!
கிராமப்புற வறுமையை ஒழிக்கும் வகையில், நூறு நாள் வேலை திட்டத்தின் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) மூலமாக தான் இந்தியாவில் வறட்சியில் தவித்து வந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஓரளவு தங்கள் வறுமையை போக்கிக்கொள்ள முடிந்தது.
வறட்சி காலத்தில் வறண்ட நீர்நிலைப் பகுதிகளை தூர்வாருதல் போன்ற பணிகளால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அந்த திட்டத்தை பா.ஜ.க இழுத்து மூடும் வேலையில் இறங்கியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததன் விளைவு, 2019-20 நிதியாண்டில், நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றமக்களின் எண்ணிக்கையிலும், வேலைநாட்களிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில், கடந்த 2018 - 2019 நிதியாண்டின் ஜனவரி 19 வரையிலான காலத்தில் மொத்தம் 52,59,912 குடும்பங்கள் 100 நாள் வேலையை முடித்திருந்தன.
ஆனால், 2019 - 2020 நிதியாண்டின் ஜனவரி 19 வரையில் மொத்தம் 14,55,805 குடும்பங்கள் மட்டுமே 100 நாள் வேலையை முடித்துள்ளன. இது ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைவாய்ப்பு கடந்தாண்டை விட 72 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதைக் காட்டுகிறது.
அதுமட்டுமின்றி, 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 12 கோடியே 43 லட்சம் பேரில், வெறும் 6.8 கோடிப் பேருக்கு மட்டும் நடப்பாண்டில் வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக, நடப்பு நிதியாண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 61,452 கோடி தொகையில் 85 சதவிகித அளவு, அதாவது ரூ.52,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
வேலை நாட்களின் எண்ணிக்கை மற்றும் வேலையில் பங்கேற்ற குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இத்திட்டத்துக்கான செலவுகள் அதிகமாகியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!