India
“தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற வந்த கட்சி அ.தி.மு.க இல்லை” - முரசொலி தலையங்கம்!
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வு தமிழில் நடத்தப்படவேண்டும் எனும் கோரிக்கை மிகப் பலமாக எழுந்துள்ளது. இதே கோரிக்கையை தி.மு.க அக்டோபர் மாதமே வழியுறுத்தியுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க என்ன சொல்கிறது? தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மெத்தப் படித்தவர் என்பார்கள். ஆனால் அவர் தப்புத்தப்பாய் பேசுவார். அப்படித்தான் இப்போது குடமுழுக்கு தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்.
அறிஞர் அண்ணா பெயரைக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அதன் அமைச்சர்கள் தமிழில் குடமுழுக்குச் செயவற்குப் பரிசீலிக்கப்படும் என்கிறார்கள். அறிஞர் அண்ணா இந்த தமிழ் வழிபாட்டு முறையைப் பற்றி கருத்துச் சொல்லி இருக்கிறார். அது திராவிட நாடு இதழில் 22.05.1955ல் வெளிவந்துள்ளது. அதில், இக்காலகட்டத்தில் குறைந்தபட்ச தமிழில் வழிபாட்டு முறையை வரவேற்ற குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளாரை வரவேற்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியாரும் இந்த வழிபாட்டு முறையைக் ‘கொள்கையில் பங்கு’ என்று சொல்வார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கடுத்துகள் மீது இந்த ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே. அ.தி.மு.க தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற வந்த கட்சி இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கொள்கை எதுவென்றும் நாம் சொல்லத் தேவையில்லை. ஆகவே ஆவர்கள் வழிவந்த அ.தி.மு.க-காரர்கள், தமிழ் வழிபாட்டிற்குரிய மொழியா என்பதில் ஐயப்பாடு உடையவர்கள்!
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!