India
ஹைட்ரோகார்பன் திட்டத்தை முன்னின்று தடுப்போம்; அதற்காக எந்த விளைவையும் சந்திக்கத் தயார்- நாராயணசாமி அதிரடி
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதியும் பொதுமக்களின் கருத்துக் கேட்பும் தேவையில்லை என திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசு அரசிதழில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசே தடுத்து நிறுத்தும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோதே இந்த திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினோம்.
அதன்பிறகு, ஜூன் 10ம் தேதி உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதமும், ஜூலை 20ம் தேதி ஹைட்ரோகார்பனுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அனுப்பி வைத்தோம். இதன் மூலம் மாநில அரசு அனுமதி கொடுக்காது என்பதை உறுதிபட பல முறை தெரிவித்துவிட்டேன்.
ஆனால், தற்போது 2 நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை. வேதாந்தா நிறுவனம் நேரடியாக பணியைத் துவங்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அரசிதழிலும் சுற்றுச்சூழல் அனுமதியும் தேவையில்லை, பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டமும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது.
குறிப்பாக, மாநில அரசின் உரிமையைப் பறித்து, மக்கள் கருத்துக்கு நேர்மாறாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. வடமாநிலங்களில் செயல்படுத்தாத இந்த திட்டங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்த நினைக்கிறார்கள். இதனை எந்தக் காலத்திலும் அனுமதிக்க முடியாது.
அப்படி மீறி செயல்படுத்த நினைத்தால், மாநில அரசே முன்னின்று தடுத்து நிறுத்தும். இதற்காக எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம். இதையெல்லாம் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!