India
இனி 3ஜி போனில் ஏர்டெல் பயன்படுத்த முடியாதா? - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல், சந்தையில் நிலைத்து நிற்க தங்களின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்து தனது தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணத்தை 42 சதவீதம் வரை உயர்த்தியது.
இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் வழங்கி வந்த 3ஜி சேவையை தற்போது நிறுத்தியுள்ளது. கடும் நிதி நெருக்கடி மற்றும் போட்டி காரணமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவை நிறுத்தப்போவதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதன்முதலாக கொல்கத்தாவில் தனது 3ஜி சேவையை ஏர்டெல் நிறுத்தியது. அதனையடுத்து, தற்போது மகாராஷ்டிரா, கொல்கத்தா, கோவா, மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் 3ஜி சேவையை நிறுத்தியுள்ளது ஏர்டெல்.
இனி படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் 3ஜி சேவை நிறுத்தப்பட்டு 4ஜி சேவை மட்டுமே வழங்கப்படும் என்வும் ஏர்டெல் அறிவித்திருந்தது. மேலும், வரும் மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 3ஜி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு 4ஜி சேவை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பினால் 3ஜி வாடிக்கையாளர்கள் 4ஜி மொபைலுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!