India
அறிவுரை என்ற பேரில் மாணவர்களின் நேரத்தை வீணடிக்கிறார் மோடி : கபில் சிபல் சாடல்!
‘பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் பொதுத்தேர்வுகளை எப்படி அணுகுவது, எப்படி தயாராவது என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி 6 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும்.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றி அறிவுரை வழங்குவார். அதன் படி, 3வது ஆண்டாக நேற்று டெல்லியில் உள்ள டல்கட்டோரா உள்விளையாட்டு அரங்கில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்பதற்காக சுமார் 1000க்கும் மேலான மாணவர்கள் நேரில் பங்கேற்க வைக்கப்பட்டனர். மேலும், நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமரின் உரையை கேட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் மோடியின் இந்த நிகழ்ச்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார். அதில், ”பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அதற்கு மாணவர்களை தயார்படுத்த விடாமல் இவ்வாறு அறிவுரை என்ற பெயரில் அவர்களின் நேரத்தை வீணடித்து வருகிறார் மோடி. இது ஏற்கத்தக்கதல்ல.” என அவர் கூறியுள்ளார்.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?