India

மெக்கா பற்றி அவதூறு பரப்பிய RSS தொண்டர்: சவூதி சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி எடுக்கும் இஸ்லாமியர்கள்

கர்நாடகா குந்தாப்பூரைச் சேர்ந்த ஹரிஷ் பங்கேரா சவூதியில் உள்ள தம்மம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் இஸ்லாமியர்களின் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும், சவுதி பட்டத்து இளவரசரை மோசமாக விமர்சித்தும் முகநூலில் பதிவு செய்த குற்றத்திற்காக சவுதி போலிஸாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

மேலும் அவர் பணிபுரிந்த நிறுவனமும் அவரை பணிநீக்கம் செய்தது. இந்த சமயத்தில் அவர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ ஒன்றும் வெளியானது. ஹரிஷ் கைதுக்குப் பின்னர் கர்நாடகாவில் இருக்கும் அவரது மனைவி, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் மத ரீதியாக தனது கணவர் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து கர்நாடக சைபர் கிரைம் போலிஸார் ஹரிஷ் முகநூல் கணக்கை நீக்கினார்கள். ஆனாலும் மெக்கா குறித்த பதிவுகள் இன்னும் பரவி வருகிறது. இந்த விவாகரம் குறித்து வெளியுறவுத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை தூதரக அதிகாரிகள் மூலம், ஹரிஷை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹரிஷின் இந்த எதிர் கருத்துகளை வைத்துக்கொள்ளாத கர்நாடக இஸ்லாமியர்கள் சிலர் சவூதியில் உள்ள தங்கள் நண்பர் மூலம் ஹரிஷை மீட்க முயற்சித்து வருகின்றனர்.

மதம் கடந்து தனது நாட்டைச் சேர்ந்தவர் என்ற முறையில் இஸ்லாமியர்கள் செய்யும் இந்த உதவிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்குள் குவிந்து வண்ணம் உள்ளது.

Also Read: ’மெக்காவை இடித்து ராமர் கோவில்’ : சவூதியில் மத வெறியைத் தூண்டும் வகையில் பேசிய இந்திய சங்கிக்கு சிறை !