India

CAA போராட்டத்தில் போலிஸ் ஏற்படுத்திய சேதங்களை சரி செய்ய நிதி கொடுத்து அசத்திய இஸ்லாமிய சகோதரர்கள்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றது. நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் போது போலிஸை ஏவி ஆளும் அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

இந்த வன்முறையின் போது பாதுகாப்பில் ஈடுபட்ட போலிஸாரே பொது சொத்துக்களையும், தனியார் சொத்துகளை சேதப்படுத்தினர். இதுதொடர்பான வெளியான வீடியோவில் அனைத்து இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டது போலிஸாரே என்று அம்பலமாயின.

ஆனாலும் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் என கூறி 498 அப்பாவி மக்களின் சொத்துகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர் போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதத்தை சரிய செய்ய இழப்பீடு தொகையை வழங்கியுள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்சாஹர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர் தங்கள் பகுதியில் கலவரத்தின் போது சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு தர முடிவு எடுத்து, பணம் வசூல் செய்தனர்.

பின்னர், வசூலான பணம் 6,27,507 ரூபாய் தொகையை புலந்த்சாஹர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளன. பொதுச் சொத்துகளையும், மக்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியது போலிஸார் என பல வீடியோவில் ஆதாரங்கள் வெளிவந்தாலும் இஸ்லாமிய மக்கள் அதற்கும் சேர்ந்து இழப்பீடு அளித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க அரசு அடையாளம் தெரியாத 10,000 மாணவர்கள் வழக்குப் பதிவு செய்தும், அப்பாவி மக்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய முயற்சித்தாலும் அவர்களின் நடவடிக்கைக்கு மாற்றாக இஸ்லாமியர்களின் இந்த முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளது.

Also Read: ‘போராட்டத்தில் ஈடுபட்ட 498 அப்பாவி மக்களின் சொத்துகள் பறிமுதல்?’ : பா.ஜ.க அரசின் ‘பாசிச’ முடிவு!