India
“முதலில் சொத்துக்கள் பறிமுதல், இப்போது 10,000 மாணவர்கள் மீது வழக்கு” : தொடரும் பா.ஜ.க அரசின் அராஜகம்!
பா.ஜ.க கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள், கல்லூரி மாணவர்கள், மாநில முதலமைச்சர்கள் என பலரும் இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்மையில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸார் நடத்திய தாக்குதல் நாடெங்கும் உள்ள கல்லூரி மாணவர்களை கோபத்திற்குள்ளாக்கியது. அதனையடுத்து, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடந்த 15ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த போலிஸார் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது போலிஸாருக்கும் மாணவர்களிடையே தள்ளுமுள்ளு வன்முறையாக மாறியது.
இந்த சம்பவத்தின் போது போலிஸார் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியும், வாகனங்களை தீயிட்டு கொளுத்தியும் அராஜாகத்தில் ஈடுபட்டனர். மேலும் பல மாணவர்கள் பலத்தக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் வருகின்ற ஜனவரி 5ம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராடட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 10,000 அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மணிலா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதில் அடையாளம் தெரியாத அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது 10,000 இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போராட்டத்தின் போது மாணவர்கள் திட்டமிட்டு வன்முறையை நடத்தியதாக போலிஸார் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ளது.
நாடுமுழுவதும் நடைபெறும் போராட்டங்களில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் போராடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பாசிச போக்கை கடைபிடிப்பதாக ஜனநாயக அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!