India

கடந்த ஆண்டை விட 74% அதிகரித்த வங்கி முறைகேடுகள் - புள்ளிவிபரம் வெளியிட்டது ஆர்.பி.ஐ!

2018-19ம் நிதி ஆண்டில் வங்கி முறைகேடுகள் 74 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த நிதியாண்டில் 6,801 வங்கி நிதி முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகளிலேயே அதிகமாக உள்ளது. முறைகேடுகள், தனியார் வங்கிகளில் 30.7%, பொதுத்துறை வங்கிகளில் 55.4% ஆகவும் உள்ளது எனவும், வெளிநாட்டைச் சேர்ந்த வங்கிகளில் 11.2% முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: KYC அப்டேட் செய்யாவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் - ஆர்பிஐ எச்சரிக்கை

2017-18ம் நிதியாண்டில் நடைபெற்ற 5,916 முறைகேடுகளில் ரூ.41,167 கோடி மோசடி நடைபெற்றது. ஆனால், 2018-19ம் நிதியாண்டில் ரூ.71,543 கோடி ரூபாய்க்கு வங்கி முறைகேடு நடைபெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் முறைகேட்டை விட 74 சதவிகிதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 7 ஆண்டுகளாக மொத்த வாராக் கடன் விகிதம் அதிகரித்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 3.7 சதவிகிதமாக குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.