India
ஜார்க்கண்ட் முதல்வர் சுயேச்சையிடம் தோல்வி முகம் : நாடு முழுவதும் வெளுக்கும் பா.ஜ.க காவி சாயம் !
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வரும் 2020 ஜனவரி 5ம் தேதி முடிவடைவதையடுத்து, அம்மாநிலத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், மொத்தம் 65.17 சதவீத வாக்குகள் பதிவாகின.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை. பா.ஜ.க தனித்தும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் தேர்தலை எதிர்கொண்டன.
இந்நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க 26 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் தோல்வி முகம் கண்டு வருகிறார். ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ரகுபர் தாஸை விட சுயேட்சை வேட்பாளர் சரயு ராய் 8 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்றுள்ளார்.
சரயு ராய் பா.ஜ.க அமைச்சரவையில் இடம்பெற்றவர். பா.ஜ.கவில் தனக்கு சீட் ஒதுக்கப்படாததால், முதல்வர் வேட்பாளரான ரகுபர் தாஸை எதிர்த்து ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் களமிறங்கினார். தற்போது, ரகுபர் தாஸை வீழ்த்தி வெல்லவிருக்கிறார் சரயு ராய்.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, பா.ஜ.க ஆளும் 3 மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தன. அவற்றில் 2 மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது பா.ஜ.க.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் மூலம் ஆட்சியைத் தவறவிட்டது பா.ஜ.க. ஹரியாணாவில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது பா.ஜ.க.
தற்போது பா.ஜ.க குஜராத், கர்நாடகா, ஹரியாணா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பீகார், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க ஆள்கிறது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!