India

“CAA போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலவரத்தை தூண்டியதாக பொய் பிரசாரம்” : பா.ஜ.கவினரின் பித்தலாட்டம் அம்பலம்!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் 9-வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது, ஆளும் பா.ஜ.க அரசித் திட்டப்படி காவல்துறையால் பல இடங்களில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்த வன்முறைக்கு காவல்துறையினரே காரணம் என போராட்டக்காரர்கள் தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையை இஸ்லாமியர்கள் மற்றும் ஜனநாய அமைப்பினரே ஏற்படுத்தியதாக பொய் பிரசாரத்தை பரப்பி வந்தனர்.

சமீபத்தில், பங்கஜ் நைன் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதான் அமைதியான போராட்டமா? என கேள்வி எழுப்பி இந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தமிழக மாநில செயலாளர் சி.ஆர்.டி.நிர்மல்குமார், இஸ்லாமியர் ஒருவர் போலிஸாரை கற்களை வீசி தாக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தார்.

ஆனால் பா.ஜ.கவினரும் இந்துத்வா கும்பலும் பரப்பி வரும் புகைப்படங்கள் கடந்த 2018-ம் நடைபெற்ற கலவரத்தில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது பகிரப்பட்டு வரும் போலிஸார் காயத்துடன் நடந்துவருவது மற்றும் போலிஸார் காயமடைந்திருப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் கடந்த 2018-ம் ஆண்டே எடுக்கப்பட்டது என AltNews ஆங்கில ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, முன்னதாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவி ‘ஆயிஷா ரென்னா’ பெயரில் ஏராளமான போலி செய்திகளை ’போட்டோஷாப்’ செய்து சமூக ஊடகங்களில் இந்துத்வா கும்பல் பரப்பி வந்தனர்.

அதேபோல், குடியுரிமை சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் ஆதரவு என்கிற வகையில் போலிச் செய்திகளையும் பரப்பி வந்தனர். இதற்காக ட்விட்டரில் ஒரே நாள் இரவில் இஸ்லாமியர்கள் பெயர்களில் ஃபேக் ஐடி உருவாக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “குல்லா – லுங்கி அணிந்து வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.கவினர்" – மேற்கு வங்கத்தில் சதித்திட்டம் அம்பலம்!