India
“குல்லா – லுங்கி அணிந்து வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.கவினர்" – மேற்கு வங்கத்தில் சதித்திட்டம் அம்பலம்!
பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது காவல்துறையால் பல இடங்களில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
மாணவர்கள் வன்முறைக்கு இஸ்லாமிய மற்றும் இடதுசாரி அமைப்புகளே காரணம் என பா.ஜ.க மற்றும் இத்துத்வா கும்பல் பொய் பிரசாரத்தை பரப்பி வந்தனர்.
சமீபத்தில் கூட ஜாமிய பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சிலர் ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு மாணவர்களை தாக்கும் காட்சி வெளியானது. ஆனால் காவல் துறை அது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்கள் போல் லுங்கி மற்றும் குல்லாவை அணிந்து கொண்டு வன்முறைக்கு சதி திட்டம் தீட்டிய 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் ஒருவர் மேற்கு வங்க பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பழிபோட முயன்றும், பிரசனையை திசைதிருப்ப பா.ஜ.கவினர் முன்றதாகவும் அவர்கள் குல்லாக்கள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது, சீர்தா – லால்கோலா பாதையில் சோதனை ரயில் இயந்திரத்தில் கற்களை வீசியுள்ளனர். இதனைக் கண்ட ராதாமதப்தாலா கிராமத்தினர் அவர்களை பிடித்து முர்ஷிதாபாத்தில் உள்ள போலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதில் உள்ளூர் பா.ஜ.க-வைச் சேர்ந்த அபிஷேக் சர்க்கார் என்பவரும் இருந்துள்ளர்.
பின்னர் போலிஸார் அவர்களை விசாரித்த பார்த்தப்போது, லுங்கி மற்றும் குல்லா தங்கள் யூடியூப் சேனலின் படப்பிடிப்பாக அணிந்திருப்பதாகக் கூறினர். ஆனால் அத்தகைய எந்தவொரு சேனலும் இருப்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்று அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகேஷ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலிஸார் ஆள்மாறாட்டம் வழக்கிலும், வன்முறையை ஏற்படுத்த முயற்சித்த வழக்கிலும், வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஸ்நகர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் சர்க்கார் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்பதை பெஹ்ராம்பூர் பா.ஜ.க வட்டாரத்தினர் உறுதிப்படுத்தினர். ஆனால், அம்மாவட்ட பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் இதனை மறுத்துள்ளனர்.
அவர்கள் 6 பேரையும் போலிஸில் ஒப்படைந்த கிராமத்தினர் ஒருவர் கூறுகையில், ”அந்த இளைஞர்கள் ரயில் பாதைக்கு அருகில் ஆடைகளை மாற்றுவதைக் கண்டதும் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் தான் அவர்களை துரத்திச் சென்று பிடித்தோம். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.” என்றனர்.
முன்னதாக, பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ”வன்முறையில் ஈடுபடுபவர்கள் அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என பேசியிருந்தார். மோடியின் பேச்சை புரிந்து கொண்ட பா.ஜ.க-வினர், இஸ்லாமியர்களின் உடையில் கலவரத்தை தூண்டும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!