India

வெளிநாட்டு முதலீடுகள் இனி வராதா? : மோடி ஆட்சியில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் !

உலகின் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலில், எந்த நாடு அதிகமான நிதி நெருக்கடியையும் கடன் சுமையும் கொண்டிருக்கின்றன என ப்ளூம்பெர்க் என்ற நிதி நிறுவனம் தகவலைத் திரட்டி அவ்வபோது அறிக்கையை வெளியிடும்.

பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் அறிக்கையை கருத்தில் கொண்டே தங்களின் முதலீடுகளை எந்த நாட்டில் கொண்டு சென்று, வணிகமாக மாற்றலாம் என முடிவு செய்யும். உலக நாடுகள் மத்தியில் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை பெறும் எதிர்ப்பைக் கொண்டதாகவே அமையும்.

இந்நிலையில், உலகில் முதல் 10 பொருளாதார நாடுகளில் அதிகம் மோசமான கடன்களை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் கடன் கொண்ட நாடாக இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

இதுதொடர்பாக ப்ளூம்பெர்க் அறிக்கையில், கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் மோசமான கடன் அளவு 5.1 சதவீதமாக இருந்து 2019-ம் ஆண்டு செப்டம்பரில் 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உதாரணமாக, மோசமான கடன் என்பது செயல்படாத கடனாகும் (NPA – Non performing Asset). குறிப்பாக 100 ரூபாய் மொத்த கடனில் 9.3 ரூபாய் செயல்படாத கடனாக இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவெனில், முதல் இடத்தில் இருந்த இத்தாலி 0.8 சதவீதம் குறைந்து இந்தியாவிற்கு பின்னால் சென்று இரண்டாவது இடத்திற்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமின்றி 10 நாடுகளில் இந்தியாவும், இத்தாலியும் மட்டுமே மொத்த கடனில் 5 சதவீதத்துக்கு மேலாக செயல்படாத கடனைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Also Read: “மோடி ஆட்சியில் அதிகரித்த வாராக்கடன்” : 9.3 லட்சம் கோடி ரூபாயில் வரவிருப்பது வெறும் 54,000 கோடிதானா?!

மேலும் இந்த பிரச்சனைக்கான காரணங்களையும் ப்ளூம்பெர்க் அதில் குறிப்பிட்டுள்ளது. அதில், வங்கி சார நிறுவனங்களின் பிரச்சனை, அதனால் நிதியை திருப்பி அளிக்கமுடியாதால் நிதி நெருக்கடி இருப்பதாக தெரிவிக்கிறது.

மேலும், இந்தியப் பொருளாதாரமும் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிக்கு சரிந்துள்ளதே என குறிப்பிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தங்களால் முடிந்த வரை இந்திய நிதி நிறுவங்களுக்கு கடன் கொடுக்க முயற்சிக்க வேண்டும், வாராக்கடன் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.