India

“வேடிக்கை பார்க்காமல், மோசடியில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுங்கள்” : கனிமொழி எம்.பி கோரிக்கை!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க எம்.பி.க்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் மக்களவையில் நடைபெற்ற ‘பூஜ்ய நேர’ விவாதத்தில் பே தி.மு.க எம்.பி கனிமொழி, வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி ஏழை மக்களிடம் ஒரு கும்பல் பண மோசடி செய்வது குறித்து பேசினார்.

அப்போது, “தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் இன்றி மக்கள் அவதிப்படும் சூழலில் வேலைவாய்ப்புத் தேர்வுகளில் ஊழல் நடைபெற்றதும், அதனை பிரதமர் அலுவலகம் தலையிட்டதும் செய்திகளாக வெளியானது. மேலும் தமிழகத்தின் இளைஞர்களை குறிவைத்து ஒரு கும்பல் மோடியில் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக, தமிழநாட்டில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் சில முக்கிய நகரங்களில் உள்ள பட்டதாரி படித்த இளைஞர்களை குறிவைத்து, “நங்கள் முன்னணி நிறுவனங்களில் இருந்து வருகிறோம். உங்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம்” என சொல்லி அதற்கு குறிப்பட்ட தொகையை முன்பணமாக செலுத்தச் சொல்கிறார்கள்.

Also Read: #LIVE | திராவிட மொழிகளுக்கு சிறப்பு இயல்புகள் உள்ளன: - மக்களவையில் ஆ.ராசா பெருமிதம்!

அதேபோல் ஓய்வு பெற்றவர்களிடம் ஆசை வார்த்தைக்கூறி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி, வங்கிக் கணக்கு மூலம் முன்பணம் பெறுகிறார்கள். ஏற்கெனவே வேலையின்றித் தவித்துவரும் இளைஞர்கள், கல்விக் கடனை செலுத்தமுடியாமலும், கடன் சுமையால் தவித்து வருகின்றனர்.

இதுபோன்ற மோசடிக் கும்பல் வேலைவாய்ப்பு என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பறிப்பதைத் தடுக்கவேண்டும். இந்த கும்பல் காவல்துறையிலும் கூட வேலை வாங்கித்தருவதாகக் கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து வெளிப்படையாக செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுத்துள்ளனர்.

இவர்களுக்குப் பின்னணியில் பெரிய நெட்வொர்க்கே இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை வேடிக்கை பார்க்கமால், உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.