India
“காஷ்மீரில் குண்டு சத்தமே கேட்கவில்லை” : ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து அமித்ஷா பேச்சு!
மக்களவையின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 2 வாரகாலமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தின் போது, ஜம்மு காஷ்மீரில் வீட்டுச் சிறையில் உள்ள தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் யாரையும் வேண்டுமென்றே ஒரு நாள் கூட சிறையில் வைக்க அரசு விரும்பவில்லை. அந்த மாநிலத்தின் உள்ளூர் நிர்வாகம் அவர்களை எப்போது விடுதலை செய்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறதோ, அப்போது விடுதலை செய்யும். அதில், நாங்கள் தலையிட மாட்டோம்” என்று பதில் அளித்தார்.
மேலும், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் எவ்வித பெரிய வன்முறையும் நடக்கவில்லை. ஒரு முறைகூட துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை எனவும் தெரிவித்தார். அமித்ஷாவின் இந்தப் பேச்சு நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சூழல் சரியில்லை என காஷ்மீர் பகுதியை பார்வையிட தேசிய தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது காஷ்மீரில் எந்த பிரச்னையும் இல்லை என அமித்ஷா தெரிவிக்கிறார் என தங்களின் அதிருப்தியை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!