India
பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.3000 கோடியை குறைக்க மோடி அரசு திட்டம்? - அதிர்ச்சி தகவல்!
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2019-20ம் ஆண்டுக்கான பள்ளிகல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதி 56,536 கோடி ரூபாயிலிருந்து 3,000 கோடி ரூபாயைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் கல்வியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது. இந்நிலையில், நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்க நிதி அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2019-20ம் நிதியாண்டில் கல்வித் துறைக்கு 93,847.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், உயர்கல்விக்கு 37,461.01 கோடி ரூபாயும், பள்ளிக் கல்விக்கு 56,386.63 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிதி அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்விக்கு ஒதுக்கிய நிதியை குறைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 3,000 கோடி ரூபாய் நிதியைக் குறைக்க முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், நிதியை குறைக்காமல் முழுமையாக அளிக்க நிதி அமைச்சகத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து நிதி அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, முன்மொழியப்பட்ட நிதி வெட்டு பல திட்டங்களை பாதிக்கும். குறிப்பாக, பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதி தேவை. கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு பணம் தேவை; அவற்றில் பணியாற்றும் பல ஆசிரியர்களுக்கும் சரிவர ஊதியம் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், “நிதியில் இருந்து ரூ. 3,000 கோடி குறைக்கப்பட்டால், என்ன பாதிப்பு ஏற்படும் என்று எங்களுக்குத் தெரியவில்லை, எனவே, முழு பட்ஜெட்டையும் எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் நிதி அமைச்சகத்திடம் கோருகிறோம்" என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரம் கூறியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்