India
ஆபாசப்படம் பார்த்தால் கைது நடவடிக்கையா? - உண்மை என்ன?
உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் குழந்தைகள் இணையதளம் மூலமாக ஆபாசப் படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒன்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்த விவரங்களை சி.பி.ஐ வெளியிட்டுள்ளதாகக் கூறி சில போலியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. ஆபாசப்படம் பார்ப்பவர்களை கண்காணிப்பதும், கைது செய்வதும் பாலியல் வன்முறையைக் குறைப்பதற்கான சரியான நடவடிக்கை ஆகாது என விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஆபாசப் படம் பார்ப்பவர்கள் குறித்து அரசு கண்காணிப்பது உண்மையா, உண்மையெனில், யார் எல்லாம் கண்காணிக்கப்படுவார்கள் என்கிற கேள்விகள் பலருக்கும் எழலாம். இதுகுறித்து, தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குனர் ரவி சமீபத்தில் விளக்கமளித்தார்.
இதுகுறித்துப் பேசிய ரவி, “உள்துறை அமைச்சகத்திற்கு அமெரிக்காவிலிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்தது உண்மைதான். அதன் அடிப்படையில் தமிழகத்தில் குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பவர்களின் பட்டியலை மத்திய அரசு எங்களுக்கு கொடுத்துள்ளது.
தமிழர்கள் இதுபோன்ற பட்டியலில் இடம்பெற்றிருப்பது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது. அடுத்த ஆண்டிற்குள் இப்படிப்பட்ட பட்டியலில் தமிழகம் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!