India
சூடான் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 23 பேர் பலியானதாகவும், 130 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாகத் தொழிற்சாலை முழுவதுமாக அழிந்துவிட்டதாகவும் அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இந்த கோர விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சூடான் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
“சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்த துயரச் செய்தி அடி மனதை உலுக்குகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து உடனடியாகப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறு, கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!
-
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
-
ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!