India
#LIVE மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - சிவசேனா அரசு வெற்றி!
நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றி!
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா கூட்டணி அரசு வெற்றி பெற்றுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக 169 வாக்குகள் பதிவு.
மகாராஷ்டிர சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் அமளி!
காங்கிரசின் அசோக் சவான் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்தார்!
மகாராஷ்டிராவில் நாளை சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
சட்டசபைக்கு சிவசேனா கூட்டணி எம்.எல்.ஏக்கள் வருகை!
இன்று பிற்பகல் 2 மணிக்கு சட்டப்பேரவை கூடிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தகவல்!
பெரும்பான்மை நிரூபிப்பது எளிது?
சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 170 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக அந்தக் கூட்டணி தெரிவித்துள்ளது. 288 இடங்களில் 145 இடங்கள் இருந்தாலே பெரும்பான்மை கிடைத்துவிடும்.
சிவசேனா கூட்டணிக்கு அதிகமான இடங்கள் உள்ளதால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு சாதாரணமாக நடந்து முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
ஆளுநர் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் உத்தவ் தலைமையிலான அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் என்று சட்டப்பேரவை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனை உறுதி செய்யும் விதமாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ திலீப் வால்ஸ் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வராகப் பதவியேற்ற உத்தவ் தாக்கரே!
பல்வேறு அரசியல் குழப்பங்களைக் கடந்து மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. தொடர்ந்து மகாராஷ்டிராவின் 18வது முதல்வராக உத்தவ் தாக்கரேவுக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க திகழ்ந்தாலும், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், ஆட்சி அமைக்க சிவசேனாவின் துணை தேவைப்பட்டது. எனினும், 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனா வலியுறுத்தி வந்தது.
இதற்கு பா.ஜ.க மறுப்புத் தெரிவித்ததால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
பின்னர், குழப்பங்களுக்கு மத்தியில், அஜித் பவார் துணையுடன் திடீரென முதல்வராகப் பதவியேற்றார் பா.ஜ.க-வின் பட்னாவிஸ். ஆனால், பெரும்பான்மை இல்லாததாலும், அஜித் பவார் தனது ஆதரவை வாபஸ் பெற்றதாலும் பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் துணையுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !