India
துப்புரவுத் தொழிலாளர்களை ’தோட்டி’ என கூறும் Zee Hindustan- தமிழ் ஊடகவியலாளர்களை ஏளனம் செய்ய தகுதி உண்டா?
இன்றைய செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற்ற ஒரு விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ஜீ நெட்வொர்க், நெறியாளர்கள், செய்தியாளர்கள் இல்லாமல் முழுக்க முழுக்க செய்திகள் வழங்கும் வகையில் புதிய சேனலை தொடங்கியுள்ளது.
ஜீ இந்துஸ்தான் என்கிற பெயரில் தொடங்கப்படவிருக்கும் அந்த செய்தி சேனலின் விளம்பரத்தில், தமிழ் ஊடகங்களின் முன்னணி ஊடகவியலாளர்களின் பெயர்களை நாகரிகமற்ற வகையில், நேரடியாகக் குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளனர்.
‘இப்போது தேசிய செய்திகள் நமது தமிழில்’ எனும் டேக்லைனுடன், நாட்டின் நெறியாளற்ற முதல் நடுநிலை செய்தி சேனல் ‘ஜி இந்துஸ்தான்’ என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்களும் விளம்பரத்திற்காக புதிய யுக்திகளைப் பயன்படுத்தினாலும், போட்டி நிறுவனங்களை நேரடியாகக் குறிப்பிட்டு விமர்சிப்பது இங்கு மரபல்ல. அப்படி இருக்கையில், போட்டி நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையிலான பாணியில் விளம்பரம் வெளியிட்டுள்ளது கண்டனங்களைச் சந்தித்துள்ளது.
ஊடக உரிமையாளர்களின் பெயரையோ, ஊடகங்களின் பெயரையோ குறிப்பிடாமல் நெறியாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது நாகரிகமற்ற செயல் எனவும், தமிழக ஊடகத்துறையில் வலதுசாரிகள் ஊடுருவல் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜீ இந்துஸ்தான் சேனலில் காவி, பச்சை ஆகிய பா.ஜ.க கொடியின் நிறங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஜீ நெட்வொர்க் நிறுவனர் டக்டர் சுபாஷ் சந்திரா, பா.ஜ.க ராஜ்யசபா உறுப்பினர் ஆவார்.
ஆளும் பா.ஜ.க அரசின் பின்னணி கொண்ட சேனலாக வெளிவரும் ‘ஜீ இந்துஸ்தான்’ நடுநிலை சேனல் எனும் போர்வையில் மக்களிடம் பா.ஜ.க-வுக்கு சாதகமான செய்திகளைப் பரப்பும் எனவும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அந்த சேனலில் துப்புரவு தொழிலை தோட்டிகளின் தொழில் என வர்ணாசிரம முறையில் குறிப்பிட்டு செய்தி ஒளிபரப்பரட்டது. இப்படிப்பட்ட கொள்கை கொண்ட ஒரு நிறுவனம் தான் நடுநிலை செய்தி வெளியிடுவதாக கூறிக் கொள்கிறது. இப்படியொரு வட இந்திய ஊடக நிறுவனத்துக்கு தமிழக ஊடகவியலாளர்களை குறை கூறவோ ஏளனம் செய்யவோ, என்ன தகுதி இருக்கிறது என்பதை தங்களைத் தாங்களே Zee Hindustan கேட்டுக் கொள்ள வேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!