கோப்புப்படம்
India

‘பத்திரங்களில் கையெழுத்துப் போட்டால் மட்டுமே விடுதலை’- காஷ்மீர் தலைவர்களுக்கு மத்திய அரசு மிரட்டல்!

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின் போது ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது மோடி அரசு.

காஷ்மீரில் மக்களை ஒன்றிணைத்து தங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாத வகையில் அரசியல் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்களான மெகபூபா முஃப்தி, ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாஜக அரசு வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துள்ளது.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விடுவிக்க வேண்டும் என நாடுமுழுவதிலும் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து ஊடகத்திடமோ, மக்களிடமோ பேச மாட்டோம் என பத்திரங்களில் கையெழுத்திடுமாறு வீட்டுச் சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை மோடி அரசு நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக அதிகாரிகள், ஆட்சியர்கள் அரசியல் தலைவர்களுடன் பலகட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மோடி அரசின் இந்த நிபந்தனைகளை ஏற்க காஷ்மீர் தலைவர்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.