India

சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே உடன்பாடு: முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிர அரசியல் குழப்பம்?

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்காமல் அவசரகதியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தினார்.

இதற்கிடையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.

தற்போது இந்த கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தைகள் இறுதி முடிவுக்கு எட்டப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், முதலமைச்சர் பதவியை சம காலத்திற்கு பகிர்ந்துகொள்வதாக சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இடையே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் மூன்று கட்சிகளிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.