India
OBC-க்கு PG மருத்துவப்படிப்பு சேர்க்கையில் இட ஒதுக்கீடு இல்லை? - சமூக நீதியைச் சிதைக்கும் பா.ஜ.க அரசு!
மருத்துவ பட்டமேற்படிப்புக்கான அகில இந்திய நீட் பிஜி (நீட் முதுநிலை) தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020-ம் ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதுமுள்ள சுமார் 30,774 மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான இடங்களுக்கு முதுநிலை நீட் தேர்வு ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50% இடங்களை மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இடஒதுக்கீடு முறையில் 50% பொதுப்பிரிவிலும், 22.5% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு (OBC) மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்றும் அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பொதுப்பிரிவில் உள்ள உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடான 10 சதவீதத்தை மொத்தமுள்ள 15,387 இடங்களிலும் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக நீதிப் போராட்டங்கள் பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை சவக்குழிக்குள் தள்ளும் இந்த அரசின் அறிவிப்பு பலரையும் கொதிப்படையச் செய்துள்ளது. இன்று மக்களவை கூட்டத்தொடரின்போது இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது குறித்து விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தது தி.மு.க.
பா.ஜ.க இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் #AntiOBC_BJP எனும் ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!