India
இந்தியாவில் இருந்து வெளியேற வோடஃபோன் முடிவு: வீழ்ச்சிக்கு காரணம் யார்? - அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டுவந்த வோடஃபோன் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்துள்ளது. இதனால் தனது இரண்டாவது காலண்டில் 510 பில்லியன் ரூபாயை இழந்துள்ளது.
இந்த இழப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் நஷ்டத்தை சந்தித்தாக வோடஃபோன் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், தனது நிறுவனத்தை இந்திய சந்தைகளுக்குள் இயக்குவது கடினம் என்ற நிலைக்கும் வோடஃபோன் வந்துள்ளது.
வோடஃபோனின் இத்தகைய நிலைக்கு என்ன காரணம் மற்றும் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களுக்கு சந்தையில் ஏற்பட்ட விழ்ச்சி எதனால் என்ற சில கேள்விகளுக்கு பொருளாதார நிபுணர்கள் சில கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதில், ஒரு பில்லியனுக்கும் மேலாக மொபைல் பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் உள்ளனர். இது உலக அளவில் பெரிய தொலைத் தொடர்ப்புக் கொண்டுள்ள நாடாகத் தான் இந்திய திகழ்கிறது. இந்த நிலையில், ஆரம்பத்தில் தொலைப்பேசி அழைப்புக் கட்டணம் குறைவு என்றாலும், இண்டெர்நெட் கட்டணம் அதிகமாகவே இருந்தது.
இந்த சூழலில் ரிலையன்ஸ் ஜியோ சந்தைகள் வந்த உடனே தனது கட்டணத்தை அடிமட்ட அளவில் குறைத்தது. இதனால் வாடிக்கையாளர்கள் ஜியோவிற்கு குவியத் தொடங்கினர். இந்த நிலைமை நீடித்தால் தாம் சந்தையில் இருக்கமுடியாது என மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களின் கட்டண விலையைக் குறைத்தன. இதனால் பெரும் இழப்புகளை வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்களே சந்தித்ததன.
இந்த நேரத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் அரசுக்கு ஏற்பட்ட ஒப்பந்ததின் படி, அரசிற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 900 பில்லியன் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததது. இதில் வோடஃபோன் மட்டும் பங்கு மதிப்பு 390 பில்லியன் ரூபாய் அளிக்கவேண்டிய நிலையில் இருந்தது. இதனால் மேலும் பலத்த நஷ்டத்தை வோடஃபோன் நிறுவனம் சந்தித்தது.
மேலும், வோடஃபோன் நிறுவனம் முதலீட்டாளர்களை பூச்சியத்தில் வைத்துள்ளது.
இதனால், அந்நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. மேலும் வோடஃபோன் போன்ற மிகப் பெரிய நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவது, நல்லதல்ல அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும் தங்குவார்கள் என பொருளாதார நிபுணர்கள் கருத்துகின்றனர்.
வோடஃபோன் வெளியேறினால், இந்திய வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இரண்டு நிறுவனத்தை மட்டுமே நம்பி இருக்கும் சூழல் ஏற்படும். அதனால் விலை அதிகரிக்கும். இரண்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணம்தான் முடிவாக இருக்கும். எனவே, இது ஆரோக்கியமான வர்த்தகமாக இருக்காது எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து வோடஃபோன் வெளியேறுமா என்ற கேள்வியும் பரவால எழத்தொடங்கியது. இதற்கு பதில் அளித்து பேசிய வோடஃபோனின் தலைமை நிர்வாகி நிக் ரீட், “இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அதிக வரி மற்றும் கட்டணங்களை குறைக்காவிட்டால், வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவது சந்தேகமே” என தெரிவித்திருந்தார்.
இந்த பெரிய நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் இருந்து கிளம்பும் இதேவேலையில் தான் இந்தியாவின் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தையும் தனியாரிடம் விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!