India
“கீழடி ஆய்வில் இந்திய தொல்லியல்துறையின் பங்கு என்ன? ஒதுக்கிய நிதி எவ்வளவு?”- மாநிலங்களவையில் வைகோ கேள்வி!
கீழடி ஆய்வுக்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு என ம.தி.மு.க பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நவம்பர் 19ம் தேதி மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் பதில் அளித்துள்ளார்.
மதுரை அருகே வைகை ஆற்றங்கரைச் சமவெளியில், கீழடி என்ற இடத்தில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. 6ம் நூற்றாண்டுக் காலத்தவை என்பது உண்மையா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்து விளக்கம் தரவேண்டும் என மத்திய பண்பாட்டுத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேலிடம் கேள்வி எழுப்பினார் வைகோ.
அதற்குப் பதிலளித்துப் பேசிய பிரகலாத்சிங் படேல், “கீழடியில், தமிழ்நாடு தொல்பொருள் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு ஆறு முதல் மூன்றாம் நூற்றாண்டுக் கால கட்டத்தைச் சேர்ந்தவை என, கரிமப் பகுப்பு ஆய்வுச் சோதனைகளின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து வைகோ, "கீழடி ஆய்வுகளில், இந்தியத் தொல்பொருள் துறையின் பங்கு என்ன? அதற்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு?" எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரகலாத் படேல், "இந்தியத் தொல்பொருள் துறை, 2014-15, 2015-16, 2016-17 ஆம் ஆண்டுகளில் கீழடியில் மூன்று களங்களில் ஆய்வுகள் மேற்கொண்டது. அதற்காக செலவிடப்பட்ட நிதி 2014-15 ஆம் ஆண்டில் 7,70,010 ரூபாய், 2015-16 ஆம் ஆண்டில் 48,50,798 ரூபாய் 2016-17 ஆம் ஆண்டில் 35,50,000 ரூபாய், 2017-18 ஆம் ஆண்டில் 22,50,000 ரூபாய்” எனப் பதிலளித்தார்.
பின்nஅர், "கீழடியில் கிடைத்த பழம்பொருட்களைக் காட்சிப்படுத்த, அங்கே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படுமா? நாடு முழுமையும் உள்ள பிற அருங்காட்சியகங்களில் அந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமா?," என வைகோ எழுப்பிய கேள்விக்கு, "இல்லை. கீழடியில், தமிழக அரசு ஒரு அருங்காட்சியகம் அமைக்கின்றது," எனப் பதிலளித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!