India
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் குளறுபடி - விசாரணை கோரி பொதுநல வழக்கு தாக்கல்!
தேர்தல் நடைமுறைகளை கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான ஆய்வு அமைப்பு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் நிலவிய குளறுபடிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை தொகுதிவாரியாக விரிவாக ஆய்வு செய்ததில் பல குளறுபடிகள் நடந்திருப்பது உறுதியாகி உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 542 நாடாளுமன்றத் தொகுதிகளில் 347 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று தொகுதிக்கு ஒன்று என்று எண்ணப்பட்ட ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளிலும் வித்தியாசம் நிலவியதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து விரிவான விசாரணக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 2019 தேர்தல் முடிவுகளோடு பாரம் 17 சி, 20, 21சி,டி,இ விபரங்களையும் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட உத்தரவிட வேண்டும். இதனை எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தல்களை குளறுபடி இல்லாமல் நேர்மையாக நடத்த தேவையான உத்தரவுகளை தேர்தல் ஆணையத்துக்குப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!