India
வாட்ஸ்அப் மூலம் வேவு பார்க்கப்படுகிறதா? - தயாநிதிமாறன் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த மத்திய அமைச்சர்!
இந்தியாவில் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் செல்போன் தகவல்கள் வாட்ஸ் அப் மூலமாக இஸ்ரேலை சேர்ந்த கண்காணிப்பு நிறுவனம் ஒன்று, ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்த்ததாக வெளியான தகவலை வாட்ஸ்அப் நிறுவனமும் ஒப்புக் கொண்டது. இது இந்திய மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுதொடர்பாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், “இந்திய மக்களின் வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ்-களை மத்திய அரசாங்கம் உளவு பார்க்கிறதா?, அப்படி உளவு பார்க்கப்படுவது உண்மையெனில் அதற்கான அனுமதி பெறுவதற்கான நெறிமுறைகள் என்ன?.
மேலும், இது மொபைல்போன் - தொலைப்பேசிப் போன்றவற்றை ஒட்டு கேட்கும் நெறிமுறைகளும் ஒரே மாதிரியானதா? இந்த நோக்கத்திற்காக இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருளை அரசு பயன்படுத்தியதா? அப்படியெனில் அதற்காக விளக்கம் அளிக்க வேண்டும். இதேபோல், பேஸ்புக் மெசஞ்சர், வைபர், கூகுள் மற்றும் பிற தளங்களின் அழைப்புகள், தகவல்களை அரசு ஒட்டு கேட்கிறதா என்ற விளக்கத்தையும் தர வேண்டும்” என அதில் கேட்டிருந்தார்.
ஆனால், அதற்கு பதில் அளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, “தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் படி, நாட்டின் இறையாண்மை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மக்களின் எந்த கணினிகளிலும் உள்ள தகவலை கண்காணிக்கவோ அல்லது இடைமறித்துப் பார்க்கவோ மத்திய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அதற்கான அனுமதியை மத்திய மத்திய உள்துறை செயலரிடம் இருந்தும், மாநில உள்துறை செயலரிடமிருந்தும் பெற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.
இந்த விளக்கம் குறித்த பதிலில், எந்த இடத்திலும் பெகாசஸ் மென்பொருள் பற்றியோ, வாட்ஸ் அப் தகவல் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் பற்றியோ கூறாமல் பொதுவான நடைமுறையில் இருப்பதை மழுப்பலான பதிலை கூறியுள்ளார். அமைச்சரின் இத்தகைய பேச்சு நாடாளுமன்ற உறுப்பினர்களுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!