India

வருவாய் அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி ஏறிக்க முயன்ற விவசாயி: தெலுங்கானாவில் நடந்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம்!

தெலுங்கானா மாநிலம் லம்படிபள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜீலா கனகையா. இவரது நிலத்தின் பிரச்சனைகளை அதிகாரிகள் கடந்து 3 வருடங்கலாக தீர்க்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் விவசாயி, வருவாய் அதிகாரியிடம் பல முறை முறையிட்டுள்ளார்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், இன்று ஆத்திரமடைந்த விவசாயி ஜீலா கனகையா, கரீம் நகர் மாவட்டத்தில் சிருகுமுண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

நிலப் பிரச்சனைக் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரிகள் முறையாக பதில் கூறாத நிலையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வருவாய் அதிகாரி அறையில் இருந்த கணனி மற்றும் கோப்புகள் மீது ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார்.

Also Read: பணியில் இருந்த பெண் தாசில்தாரை எரித்துக்கொன்ற விவசாயி : அலுவலகத்தின் உள்ளே நடந்த பயங்கர சம்பவம்

இந்த சம்பவத்தின் போது அங்கு இருந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தடுக்க முன்றனர். அப்போது அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் ஊழியர்கள் மீதும் பட்டுள்ளது.

இதனையடுத்து உடனே வந்த போலிஸார் விவசாயி கனகய்யாவை அவர்கள் கைது செய்து அழைத்து சென்றனர். ஆனால் இச்சம்பவத்தால் ஊழியர்கள் மிகவும் பதற்றமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர் மேட் மண்டல தாசில்தாராக இருந்த விஜயா ரெட்டியை, ரமேஷ் என்ற விவசாயி அவரது அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து எரித்து தீவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.