India
''நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் காற்று மாசு குறைந்து விடுமா'' - கம்பீர் அலட்சிய பதில்
டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருகிறது. இயற்கையாகக் கிடைக்கும் காற்றைக்கூட காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் டெல்லி மக்கள்.
இந்நிலையில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற ஆலோசனைக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், டெல்லி கிழக்கு பா.ஜ.க எம்.பி.,யும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் பங்கேற்காமல் இந்தூரில் நடந்த இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டிக்கான வர்ணனையாளராகச் சென்று இருந்தார்.
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் காற்று மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காமல் கிரிக்கெட் போட்டிக்குச் சென்றதற்காக #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக்கில் கம்பீரைக் கடுமையாக சாடி பதிவிட்டனர். மேலும், டெல்லியின் சில பகுதிகளில் பா.ஜ.க எம்.பி கவுதம் கம்பீரை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டது.
அந்த சுவரொட்டிகளில் “இந்த நபரை நீங்கள் பார்த்தீர்களா? கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடும் போது காண முடிந்தது. ஒட்டுமொத்த டெல்லியும் அவரைத் தேடுகிறது”என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் காற்று மாசுபாடு குறைந்து விடுமா என கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கவுதம் கம்பீர், ''காற்று மாசு குறித்த கூட்டம் மிகவும் முக்கியமானதுதான். ஆனால், கடந்த ஜனவரி மாதமே இப்போட்டிக்கு வர்ணனை செய்வதற்காக, ஒப்பந்தமாகி விட்டேன்.
ஒப்பந்தத்தை மீற முடியாது என்பதால் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்பதையும் நான் முன்பே கூறிவிட்டேன்'' எனத் தெரிவித்தார்.
மேலும், நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் காற்று மாசுபாடு குறைந்து விடுமா…? நான் ஜிலேபி சாப்பிட்டதால் தான் காற்று மாசு அதிகரித்திருந்தால் ஜிலேபி சாப்பிடுவதையே நிறுத்தி கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார். கம்பீர் இந்த பேச்சு அலட்சிய தொணியில் இருப்பதாக மக்கள் கூடுதல் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!