India
மோடியின் 5 வருட ஆட்சியில் 3,400 வங்கிக் கிளைகள் மூடல் : ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசால் வங்கிகள் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளால் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்யும் நிறுவங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாக கூறப்படுகின்றனர்.
இதனால் சிறுகுறு தொழில்கள் மட்டுமின்றி, வங்கி கிளைகளும் இழுத்தும் மூடப்பட்ட நிலைமைக்கு வந்துள்ளனர். குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தபின், வங்கிகள் இணைக்கப்படுவதும், கிளைகள் மூடப்படுவதும் தொடர் நடவடிக்கைகளாக மாறியுள்ளன. வராக்கடன்கள், வங்கி மோசடிகளை தடுக்க முடியாத நிலையில், தனது நிர்வகிக்க திறனை மறைக்க, மோடி அரசு வங்கி கிளை மூடல் குறித்து பேசாமல் கண்மறைப்பு வேலைகளில் ஈடுபட்டுவருகின்றது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் கவுத். சமூக ஆர்வலரான இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வங்கிக் கிளைகள் இதுவரை மூடப்பட்டிருக்கின்றன என கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3 ஆயிரத்து 427 வங்கிக் கிளைகளை மூடியுள்ளன என்றும் மற்ற வங்கிக் கிளைகளோடு இணைத்துள்ளன என்று தெரிவித்துள்ளது.
இதில் மற்றொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், மூடப்பட்ட மொத்த வங்கிக் கிளைகளில் 75 சதவிகித வங்கிக் கிளைகள் - அதாவது 2 ஆயிரத்து 568 வங்கிக் கிளைகள், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்று தெரிவித்துள்ளது.
மேலும், 2014-15ம் ஆண்டில் 90 கிளைகள் மூடப்பட்ட நிலையில் 2015-16ம் ஆண்டில் 126 கிளைகளாகவும், 2016-17ஆம் ஆண்டில் 253 கிளைகளும் முடிய நிலையில், 2017-18ம் ஆண்டில் 2 ஆயிரத்து 83 கிளைகள் என்று அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் வங்கி கிளைகள் உருவாக்குவதற்கு பதில் மூடும் நடவடிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் தற்போது வரை 875 கிளைகள் மூடப்பட்டுள்ளன.
பாரதிய மகிளா பாங்க், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானெர் - ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதேபோல 2019 ஏப்ரல் மாதத்தில் தேனா வங்கியும் விஜயா வங்கியும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களிடம் வாங்கும் திறம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க-வினர் தம்பட்டம் அடித்துவரும் நிலையில் 5 வருடங்களில் 3 ஆயிரத்து 400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ள தகவல் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும். இனியும் மூடிமறைக்கும் வேலையை பா.ஜ.க-வினர் செய்ய முடியாது. எனவே பொருளாதார பிரச்சனையை சரிசெய்ய கவனம் செலுத்தவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!