India
“இது என்ன 50-50 பிஸ்கெட்டா?” : பா.ஜ.க - சிவசேனா அதிகாரப் போட்டியை விமர்சிக்கும் ஓவைசி!
மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க - சிவசேனா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைத்தன.
இருப்பினும் இரு கட்சிகளிடையே 50:50 என்ற அதிகாரப் பகிர்வு குறித்த பிரச்னையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் ஏற்கனவே நடந்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் முரண்டுபிடித்து வருவதாகவும் தெரிகிறது. இதனால் உத்தவ் தாக்கரே, முதல்வர் பட்னாவிஸ் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஓவைசி கூறுகையில், “இது என்ன 50-50 புதிய வகை பிஸ்கெட்டா? மகாராஷ்டிரா மக்களை காப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்யுங்கள். இவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் பேசுவது எல்லாம் 50-50 பற்றியே உள்ளது. இது என்ன வகையான வளர்ச்சிக்கான விஷயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர்,“மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு பா.ஜ.க அல்லது சிவசேனாவை ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆதரிக்காது” என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
மேலும், ஃபட்னாவிஸ் அல்லது வேறு யாராவது முதலமைச்சராகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. மகாராஷ்டிராவில் ‘மியூசிக்கல் சேர்’ நடந்து கொண்டிருக்கிறது. சிவசேனாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு பயப்படுவதாகத் தெரிகிறது” என ஓவைசி கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?