India
தொடர்ந்து 3-வது மாதமாக ஜி.எஸ்.டி வரி வருவாய் சரிவு: பொருளாதார மந்த நிலையால் திணறும் மோடி அரசு!
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.கட்சி, ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவந்து நாட்டின் வருவாயை பெருக்குவதாக அறிவித்தது. ஆனால் தற்போது ஏற்படுள்ள பொருளாதார மந்தநிலைக் காரணமாக வருவய் இழப்பு தான் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஜி.எஸ்.டி வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயித்து இருந்தநிலையில், இலக்கை விட குறைவாகவே வசூலாகி உள்ளது. ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதத்திலும் சரிவு கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் அக்டோபர் மாதத்தில் மட்டும் 95 ஆயிரத்து 380 கோடி ரூபாய் வரி வசூலாகியுள்ளது.
அதாவது 5.29 சதவிதம் அளவிற்கு குறைந்துள்ளது. கடந்தாண்டு இதே அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 710 கோடியாக இருந்தது. இதே கடந்த செப்டம்பர் மாதத்தில் 91,916 கோடி ரூபாயாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய ஜி.எஸ்.டி-யாக 17 ஆயிரத்து, 582 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி-யாக 23 ஆயிரத்து, 674 கோடி ரூபாய் ஆகும். அதேசமயம் ஒருங்கிணைந்த, ஜிஎஸ்டி வசூல், 46 ஆயிரத்து, 517 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது.
இதில், இறக்குமதி மூலமாக பெறப்பட்ட ஜிஎஸ்டி 21 ஆயிரத்து 446 கோடி ரூபாய் ஆகும். ‘செஸ்’ எனப்படும் கூடுதல் வரி வருவாய் 7 ஆயிரத்து 607 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அத்துடன், தொடர்ந்து முன்றாவது மாதமாக, ஜி.எஸ்.டி வரி வருவாய் வசூல் ஒரு லட்சம் கோடிக்கு கீழே போயிருக்கிறது.
நாட்டு மக்களின் வாங்கும் திறன் குறைந்ததே, ஜி.எஸ்.டி வருவாய்க் குறைவுக்குக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் பண்டிகைக் காலம் என்பதால் இம்மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல் சற்று அதிகரித்திருக்கலாம். ஆனால் நவம்பர் மாத நிலைமை படுமோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!