India
“மோடி ஆட்சியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு” : அக்டோபரில் 8.5% உயர்ந்ததாக அதிர்ச்சி தகவல்!
இந்தியாவின் பொருளாதார நிலை, இதுவரை பார்த்திராத அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை என மூடி மறைத்து வருகிறது.
இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் தான் இளைஞர்கள் அதிகமாக வேலையில்லாமல் தவித்துவருவதாக சி.எம்.ஐ.இ முன்பே கூறியது.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அக்டோபர் மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சி.எம்.ஐ.இ - Centre for Monitoring Indian Economy (CMIE) மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது மிக அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 7.2 சதவீதமாக இந்த நிலையில் அடுத்த மாதமே வேலையில்லாதோர் எண்ணிக்கை 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு செப்டம்பரில் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் 5.2 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இது, கடந்த ஓர் ஆண்டில் மிக மோசமான செயல்பாடு எனவும் தெரிவித்துள்ளது.
அதனையடுத்து, தொழில் துறை வளர்ச்சி என்பதும் தனது விரைவான வளர்ச்சிப் பாதையில் இருந்து மந்தநிலைக்கு திரும்பியுள்ளளதாகவும் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜ.க மேம்படுத்தியுள்ளதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடிக்கு இந்த புள்ளிவிவரம் நிச்சயம் கலக்கத்தை எற்படுத்தும்.
ஏற்கெனவே, பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல் டீசல் விலை, ஆகியவற்றால் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?