India
அமெரிக்கப் பெண்ணை ஏமாற்றிய இந்தி டாக்ஸி டிரைவர் : பணத்தைத் திருட இப்படியும் ஒரு திட்டமா ?
இந்தியாவைச் சுற்றி பார்க்க வந்த அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வான்மீட்டரை, பண்டிகை காலம் என்பதால் டெல்லிக்கு விடுமுறை என்று நம்ப வைத்து ரூபாய் 90 ஆயிரம்வரை ஏமாற்றிய டாக்ஸி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வான்மீட்டர். இவர் இந்தியாவைச் சுற்றி பார்ப்பதற்காக கடந்த 18-ம் தேதி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் இந்தியா வருவதற்கு முன்பே டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள விடுதியில் புக் செய்துள்ளார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஜார்ஜ் வான்மீட்டர் டாக்ஸி ஒன்றில் ஏறியுள்ளார். அப்போது டாக்ஸி ஓட்டுநர் கொனாட் பிளேஸ் சாலையில் செல்லும் போது போலிஸார் சாலையை தடுத்து போக்குவரத்தை மாற்றியுள்ளனர்.
சாலைகளில் தடுப்புகள் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஓட்டுநர், இன்று டெல்லியில் விடுமுறை. அந்த விடுதிக்கு செல்லும் சாலை முழுவதும் தடுக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு போகமுடியாது எனக் கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியில் இருந்த ஜார்ஜிடம் வேறு ஒரு நல்ல விடுதியில் தங்க வைப்பதாக கூறி, தனக்கு தெரிந்த ஏஜெண்ட்டிடம் கூடிச் சென்றுள்ளார். அந்த ஏஜெண்ட் ஆக்ராவில் கமிஷன் கிடைக்கும் என எண்ணி ஒரு பெரிய விடுதியில் தங்க வைத்துள்ளார்.
விடுதிக்குச் சென்றபிறகு அந்த பெண் முன்பு புக் செய்திருந்த விடுதிக்கு போன் செய்து ”இதுபோல பிரச்சனை உள்ளதை முன்பே ஏன் சொல்லவில்லை; எனது பணத்தை திருப்பி தாருங்கள்” எனக் கூறியுள்ளார்.
ஆனால் அதுபோல எந்த பிரச்சனையும் இல்லை என்று விடுதி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. பின்புதான் ஜார்ஜுக்கு தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என தெரிந்துள்ளது. இதனையடுத்து தற்போது தங்கியிருக்கும் விடுதியும் காலி செய்தால் பணத்தைத் தரமாட்டோம் என கூறியதால் டெல்லி போலிஸாரிடம் ஜார்ஜ் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் விசாரணை நடத்தியதில் ஓட்டுநர் டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்த ராம்ப்ரீத் என்பதும் அவர் தான் ஏமாற்றியுள்ளார் என்பதனையும் கண்டறிந்தனர். இதனையடுத்து ஓட்டுநர் ராம்ப்ரீத் கைது செய்த போலிஸார் சுற்றுலா பயணிகளுக்கு எதிராக முறைகேடுகளைத் தவிர்க்கும் சட்டம், 2010 ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் முறைக்கேடாக பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்க டெல்லி போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜார்ஜ் வான்மீட்டர் கூறுகையில், “விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் எனது போன் வேலை செய்யவில்லை. ஓட்டலுக்கு செல்லும் வழியில் தடை ஏற்படுத்தி இருந்தது. இதன்காரணமாக டாக்ஸி ஓட்டுநரே அவரின் செல்போன் மூலம் அந்த விடுதிக்குப் போன் செய்தார்.
போன் பேசி முடித்துவிட்ட பிறகு, நீங்கள் புக் செய்திருக்கும் விடுதிக்குச் செல்லமுடியாது என்று கூறினார். அதனால் அவர் சொன்ன ஓட்டலில் தங்கினேன். அந்த ஓட்டலில் ஒருநாள் இரவுக்கு மட்டும் 450 டாலர்கள் வாங்கி விட்டார்கள். அந்த நிர்பந்தத்தில் நானும் பணம் செலுத்திவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?