India
உ.பி-யில் முஸ்லிம் கவிஞரின் கவிதையை கற்றுகொடுத்த தலைமை ஆசிரியர் பணிநீக்கம் : அந்த கவிஞர் யார் தெரியுமா?
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தின் கயாஸ்பூர் அரசு துவக்க பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் புர்ஹான் அலி. இவர் தனது சொந்த பணத்தை பள்ளி உள்கட்டமைப்புக்காக பலமுறை செலவு செய்துள்ளார். அவர் தன் சொந்த செலவில் 65,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு ப்ரொஜெக்டரை வாங்கி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையைத் தொடங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த அவர் தனது சம்பளத்திலிருந்து தவறாமல் பங்களிப்பு செய்துள்ளார். மாணவர்களை நல்வகைப்படுத்தும் நோக்கில் தினமும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரைகளை வாசிக்க வைப்பார். அதன்படி, முஸ்லிம் கவிஞர் முகமது இக்பால் எழுதிய கவிதையை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
இதனை சகிக்க முடியாத, விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர், ஒரு முஸ்லிம் கவிஞரின் பாடலை, தலைமை ஆசிரியர் புர்ஹான் அலி, குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாட வைப்பதாக கல்வித்துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
பிஷல்பூர் பகுதி கல்வி அலுவலர் உபேந்திர குமாரும், வி.எச்.பி அமைப்பின் புகாரை ஏற்றுக் கொண்டு, தலைமை ஆசிரியர் புர்ஹான் அலியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுமாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எங்கள் தலைமை ஆசிரியர் வந்து பாடம் நடத்தினால் மட்டுமே தான் பள்ளிக்கு வருவோம் என கூறிய மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த வெளிநடப்பிற்கு அப்பள்ளியின் சக அசிரியர்கள் இதற்கு ஆதரவு அளித்தனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதனையடுத்து கல்விதுறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தலைமை ஆசிரியர் இஸ்லாமிய கவிதை வாசிக்க கட்டாயப்படுத்துகிறார் என்று முதலில் எண்ணப்பட்டது. ஆனால் அது கவிஞர் முகமது இக்பாலின் தேசப்பற்றை ஊட்டக்கூடிய கவிதை என்று பின்பு தான் கண்டறியப்பட்டது.
உண்மையை கண்டறியாமல், பிஷல்பூர் பகுதி கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் தலைமை ஆசிரியர் மீது அவசர நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து கல்வி இயக்குநரகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் தலைமை ஆசிரியரின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படும்” என்று கூறினார்.
மகாகவி முகம்மது இக்பால்:
இந்திய மகாகவிகளான ரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதி வரிசையில், முகம்மது இக்பாலும் ஒருவராவார். நாட்டுப் பிரிவினையின் போது, இக்பால் வசித்துவந்த சியால்கொட் பகுதி, பாகிஸ்தானுக்குள் சென்றதால், இக்பாலும் பாகிஸ்தானியராகிவிட்டார். முஸ்லிம் கவிஞராகவும் அடையாளமாகிப் போனார்.
கவிஞர் இக்பால் அவர்களால் எழுதப்பட்ட “சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா” என்று தொடங்கும் பாடல்தான், 1947 ஆகஸ்ட் 15-ல் பிரிட்டிஷார் விரட்டியடிக்கப்பட்ட பின்னர், இந்திய நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தபாடலாகும். மறைந்த பிரதமர் நேருவுக்கு விருப்பமான இந்த பாடல், இப்போதும் தேசப்பக்திக்கான பாடலாக இந்தியா முழுவதும் ஒலித்து வருகிறது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த முகம்மது இக்பாலின் கவிதையை பள்ளி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்ததற்காக தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்