India
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது? : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவரது இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 24ம் தேதி வரை நடத்தப்படும் என தகவல் வெளியானது.
இருப்பினும் நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, குளிர்கால கூட்டத்தொடரை எப்போது தொடங்குவது தொடர்பாக இன்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுத் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடியது. அப்போது, நவ.,18ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளின் செயலகத்திற்கும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் குளிர்கால கூட்டத்தொடர் குறித்து தகவல் அனுப்பப்பட்டது.
எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது குடியுரிமை திருத்த மசோதா, இ-சிகரெட் தடை, கார்ப்பரேட்டுகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட பல தொடர்பாக மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, எதிர்க்கட்சிகள் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரத்தில் விவாதிக்க திட்டமிட்டுள்ளன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!