India

KYC அப்டேட் செய்யாவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் - ஆர்பிஐ எச்சரிக்கை

வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கும் போது, குறிப்பிட்ட நபரை பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள KYC எனும் சுய விவரங்கள் அடங்கிய படிவத்தை சமர்பிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதன்படி, வாடிக்கையாளர்களின் அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று, தொலைபேசி, இமெயில், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை வங்கியிடம் சமர்பிக்க வேண்டும்.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் KYC ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் KYC படிவத்தை புதுப்பிக்காவிட்டால் வங்கிக் கணக்கும் முடக்கப்படும் என்றும் அந்த வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என்றும் ஆர்பிஐ எச்சரித்துள்ளது.

பணப்பரிமாற்ற மோசடிகளை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும் KYC நடைமுறை பின்பற்றப்படுகிறது என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.