India
“ஜி.டி.பி வெறும் 5.8% மட்டுமே இருக்கும்” : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்த ‘மூடிஸ்’!
சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியிட்டிருந்த பொருளாதார வளர்ச்சி கணிப்பில் இருந்து தற்போது மதிப்பைக் குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூடிஸ் நிறுவனம், கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என கூறியிருந்தது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம், ஜி.டி.பி மதிப்பை 6.2 சதவிகிதம் என்று 6 புள்ளிகளைக் குறைத்தது.
அதனையடுத்து, தற்போது அக்டோபரில் புதிய அறிக்கையை மூடிஸ் வெளியிட்டுள்ளது. அதில், முந்தைய கணிப்பிலிருந்து இந்த மதிப்பை மேலும் 0.4 புள்ளிகள் குறைத்து 5.8 சதவிகிதத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
தற்போதைய மந்தமான பொருளாதார வளர்ச்சி நீடிக்கும்பட்சத்தில், அரசின் நிதி திரட்டும் திட்டங்களுக்கான வாய்ப்புகள் குறைந்து, கடன் சுமை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் ‘மூடிஸ்’ எச்சரித்துள்ளது.
இதனிடையே, ‘மூடிஸ்’ நிறுவனத்தின் குறைக்கப்பட்ட வளர்ச்சிக் கணிப்பு வெளியானதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களிலும் பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. முக்கியத் துறைகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ரிசர்வ் வங்கி, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 6.6 சதவிகிதத்தில் இருந்து, 6.1 சதவிகிதமாக குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !