India

பா.ஜ.க ஆட்சியில் டாடா-வுக்கு நேர்ந்த சோகம் : 9 மாதங்களில் ஒரே ஒரு ‘நானோ கார்’ மட்டுமே விற்பனை !

பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

குறிப்பாக, மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் 2019-ம் ஆண்டு வரையிலான கார் விற்பனை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 26 சதவிகித அளவிற்கு சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் வணிக சந்தையில் லாரி போன்ற வாகனங்களைத் தயாரிப்பத்தில் முன்னோடி நிறுவனமான செயல்படும் அசோக் லேலண்டு தனது விற்பணையில் 55 சதவிகித அளவிற்கு சரிவை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிறுவனங்களின் விற்பனை குறைந்ததற்கு பொருளாதார சரிவு, அந்த வாகனங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் மக்களால் வாங்க முடியாத சூழல் உருவானது. ஆனால், தற்போது மிக மலிவான கார்களையும் மக்களால் வாங்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளனர்.

டாடா-வின் கனவுத் திட்டம் என்ற பெயலில் மிக மலிவான விலையில் கொண்டுவரபட்ட நானோ காரின் விற்பனையும் சரிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக நானோ கார் ரூபாய் 1 லட்சம் என என நிர்ணயிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால் அதனையடுத்து தொடர்சியாக வந்த புகார் மற்றும் பொருளாதார விற்பனை சரிவு போன்ற காரணங்களால் நானோ கார் விறபனை சரிந்துள்ளது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டுகான தனது விற்பனை விவரத்தை நானோ கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனையாகியுள்ளது. மேலும், நானோ கார் உற்பத்திக்கு இனிமேல் முதலீடு செய்வதாக இல்லை என்றும் காரின் விற்பனை ஏப்ரல் 2020 உடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக் முன்பே, உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.